தாராவியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று


தாராவியில் மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 May 2020 5:07 AM IST (Updated: 22 May 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் மேலும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இங்கு வசித்து வரும் வெளிமாநில மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். இந்தநிலையில் நேற்றும் 4 வயது சிறுவர்கள் 2 பேர், 5 வயது சிறுவன் உள்பட தாராவியில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதில் அதிகபட்சமாக 6 பேர் மாட்டுங்கா லேபர் கேம்ப்பையும், 5 பேர் முகுந்த் நகரையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதேபோல் சாஸ்திரி நகரை சேர்ந்த 4 பேரும், ராஜூவ்காந்தி நகர், சாகுநகரை சேர்ந்த தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மாட்டுகா ரெயில்வே காலனி, பேப்பர் மில் காம்பவுன்ட், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுவரை தாராவியில் 1,425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 3 நாட்களாக இங்கு ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை தாராவியில் 56 ேபர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோல மாகிமில் 14 பேரும், தாதரில் 5 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை முறையே 263, 192 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story