கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் குடைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் குடைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் குடைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிவாரண தொகை
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாத காலமாக கொரோனா தொற்று காரணமாக ஆட்டோ தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்தநிலையில் தொழிலாளர்் நல வாரிய அலுவலகத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு இரண்டு கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் முழுமையாக தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் பதிவு செய்த பலருக்கு அரசு அறிவித்த நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப் படவில்லை. எனவே அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி நேற்று திருவாரூர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் கையில் குடைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அனிபா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொரோனா நிவாரண நிதியை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். உரிமம் வைத்துள்ள அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story