கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணையில் மீண்டும் தண்ணீர் தேக்கம்


கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணையில் மீண்டும் தண்ணீர் தேக்கம்
x
தினத்தந்தி 22 May 2020 8:09 AM IST (Updated: 22 May 2020 8:09 AM IST)
t-max-icont-min-icon

கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணை பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

தேவூர், 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் செக்கானூர் நீர்மின்தேக்க நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர்மின்தேக்க நிலையம், கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின்தேக்க நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் நோக்கி செல்கிறது. இந்த நீர்மின்தேக்க நிலையங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் தினந்தோறும் மின்உற்பத்தி நடைபெறுகிறது. அவ்வாறு மின்உற்பத்தி நடைபெறும் நீர்மின்தேக்க நிலையங்களில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு 15 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமாகும்.

இதையடுத்து தேவூர் அருகே கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணை பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதனால் இந்த பகுதி தண்ணீர் இன்றி பாறை திட்டுகளாக காட்சியளித்தது. மேலும் மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு கடந்த சில நாட்களாக தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரால் கோனேரிப்பட்டி நீர்மின்தேக்க கதவணை பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. தற்போது இந்த தண்ணீரில் இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகிறார்கள்.

Next Story