பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் பெற உரிய ஆவணங்களை அளிக்கலாம்; கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்


பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் பெற உரிய ஆவணங்களை அளிக்கலாம்; கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 3:18 AM GMT (Updated: 22 May 2020 3:18 AM GMT)

ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் வழங்க கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கோரி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளரை தலைவராக நியமித்து 4 உறுப்பினர்கள் கொண்ட குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது

 எனவே இதுதொடர்பாக அந்த குழுவிற்கு கோரிக்கைகள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் வருகிற 26-ந் தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட கலெக்டர் அல்லது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்குனர் அலுவலக குழு உறுப்பினர் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாகவோ, தபால், மூலமாகவும் அளிக்கலாம். 

மேற்கண்ட தகவலை கலெக்டர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

Next Story