ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி செய்ய ரூ.62 லட்சத்தில் நவீன வாகனம்
தூய்மை பணி செய்ய ரூ.62 லட்சத்தில் நவீன வாகனத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இயக்கி வைத்தார்
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகரத்தை பொலிவுறச்செய்யும் இந்த திட்டத்தில் அடுத்த கட்டமாக சாலைகளை தூய்மை செய்யும் நவீன வாகனம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.62 லட்சம் செலவில் வாங்கப்பட்டு உள்ள இந்த வாகனம் பல நவீன தொழில் நுட்பங்கள் கொண்டது. சாலைகளை தூய்மைப்படுத்தும் பணியில் இது ஈடுபடும்.
இதன் செயல்பாடுகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நவீன தூய்மை பணி வாகனத்தை பார்வையிட்டு இயக்கி வைத்தார். இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story