கேரளாவில் இருந்து லாரியில் அனுமதியின்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்
சேத்தூர் சொக்கநாதன்புத்தூர் விலக்கு பகுதியில் கேரளாவில் இருந்து லாரியில் அனுமதியின்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தளவாய்புரம்,
சேத்தூர் சொக்கநாதன்புத்தூர் விலக்கு பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நேற்று போலீசார் பணியில் இருந்தபோது கேரளாவில் இருந்து மேற்குவங்கத்துக்கு சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தினர். அதை சோதனை செய்ததில் 75 வடமாநில தொழிலாளர்களை ஏற்றி வந்தது தெரிந்தது. அவர்களிடம் அனுமதி சீட்டு உள்ளதா என போலீசார் சோதனை செய்தனர். அப்போது 30 பேர் உரிய அனுமதி இல்லாமல் பயணித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் அருகில் உள்ள ஒரு கல்லூரியில் தங்க வைத்தனர். உடனே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கல்லூரியில் போதிய வசதி இல்லாததால் அந்த வட மாநில தொழிலாளர்கள் ராஜபாளையத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story