நிவாரணத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


நிவாரணத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2020 12:17 PM IST (Updated: 22 May 2020 12:17 PM IST)
t-max-icont-min-icon

நிவாரணத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர், 

நிவாரணத்தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு.வின் பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகம், தி.மு.க.வின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை, விவேகானந்தா ஆட்டோ சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆட்டோ டிரைவர்கள் ஊரடங்கு நிவாரணத்தொகையாக ஆட்டோ டிரைவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் அரசு வழங்க வேண்டும்.

தள்ளுபடி செய்ய வேண்டும்

தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ரூ.2 ஆயிரத்தை நல வாரியத்தில் பதிவு செய்யாத ஆட்டோ டிரைவர்களுக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். ஊரடங்கு வழிமுறைகளுக்கு உட்பட்டு ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் டிரைவர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு, எப்.சி. சாலை வரி உள்ளிட்ட கட்டணங்களை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் டிரைவர்களுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story