மோட்டார் சைக்கிள் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 22 May 2020 12:33 PM IST (Updated: 22 May 2020 12:33 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சிவகுமார்(வயது 52). இவர் மீன்சுருட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

மீன்சுருட்டி, 

ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சிவகுமார்(வயது 52). இவர் மீன்சுருட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் நேற்று இரவு ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலையில் உள்ள மாவட்ட எல்லையான ஆத்துகுறிச்சியில் உள்ள சோதனை சாவடியில் இரவு பணிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டி போலீஸ் நிலையம் அருகே சென்றுகொண்டு இருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், சிவகுமார் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. 

இதில் படுகாயம் அடைந்த சிவகுமாரையும், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாடுதுறையை சேர்ந்த சங்கரையும்(38) அப்போது மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தனது ஜீப்பை கொடுத்து உடனடியாக இருவரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்க கூறினார். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story