வெளிமாநில தொழிலாளர்களை காலால் எட்டி உதைத்த தாசில்தார் விசாரணை நடத்த மந்திரி உத்தரவு

வசாய்,
வெளிமாநில தொழிலாளிகளை காலால் எட்டி உதைத்த பால்கர் மாவட்ட தாசில்தார் மீது விசாரணை நடத்த மந்திரி பாலசாகேப் தோரட் உத்தரவிட்டு உள்ளார்.
பால்கரில் இருந்து வடமாநிலத்திற்கு செல்ல 3 சிறப்பு ரெயில்கள் அங்கு தயார் நிலையில் இருந்தது. இந்த ரெயிலில் ஏறி செல்ல வெளிமாநில தொழிலாளிகள் சுமார் 5 ஆயிரத்து 200 பேர் அங்குள்ள ஆரியன் மைதானத்தில் கூடி இருந்தனர். அவர்கள் எல்லாரும் டோக்கன் பெற்று வரிசையில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த பால்கர் மாவட்ட தாசில்தார் சுனில் ஷிண்டே வெளிமாநில தொழிலாளிகள் குழுமியிருந்த கூட்டத்தை கண்டு எரிச்சல் அடைந்தார்.
மேலும் அருகே நின்று கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளிகள் சிலரை காலால் எட்டி உதைத்து அவதூறாக திட்டி உள்ளார்.
மேலும் வெளிமாநில தொழிலாளியை ரெயிலில் ஏற அனுமதி தராமல் வெகுநேரமாக நிறுத்தி வைத்திருந்து உள்ளார். இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தாசில்தாரின் நடவடிக்கையை சமூக வலைதளத்தி்ல் பரப்பி விட்டார். இச்சம்பவம் குறித்து பால்கர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதற்கிடையே இச்சம்பவம் பற்றி அறிந்த வருவாய்த்துறை மந்திரி பாலசாகேப் தோரட் தகாத முறையில் நடந்து கொண்ட தாசில்தார் சுனில் ஷிண்டே மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story