பால்தாக்கரே பெயரில் சிறப்பு வேளாண் திட்டம் மந்திரி தத்தா புசே தகவல்


பால்தாக்கரே பெயரில் சிறப்பு வேளாண் திட்டம் மந்திரி தத்தா புசே தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 5:15 AM IST (Updated: 23 May 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெயரில் சிறப்பு வேளாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மந்திரி தத்தா புசே தெரிவித்துள்ளார்.

மும்பை,

தானேயில் வேளாண்மை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில வேளாண்மை துறை மந்திரி தத்தா புசே கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மராட்டியத்தில் இந்த ஆண்டு விவசாய உற்பத்தி ஆண்டாக கொண்டாடப்படும். விவசாயிகள் பாரம்பரிய சாகுபடி நுட்பங்களுடன் கரிம வேளாண்மையையும் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த விவசாய பொருட்கள் வேளாண்மைதுறை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

இதேபோல விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்படுவதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்காக மாநில அரசு சிறப்பு வேளாண் திட்டம் ஒன்றை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டம் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே பெயரில் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story