சிவகிரி அருகே ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணி - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்


சிவகிரி அருகே ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணி - அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 May 2020 5:54 AM IST (Updated: 23 May 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே அமைச்சர் ராஜலட்சுமி ரூ.75 லட்சத்தில் கண்மாய் சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.

சிவகிரி, 

சிவகிரி தாலுகாவில் உள்ள தென்மலை பெரியகுளம் கண்மாய் தென்மலை விவசாய சங்கத்தின் 10 சதவீத பங்களிப்புடன் ரூ.75 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை மூலம் கரைகளை உயர்த்துதல், மதகுகளை சீரமைத்தல் உள்பட பல்வேறு குடிமராமத்து பணிகள் நடைபெற இருக்கிறது. அதன் தொடக்க விழா நேற்று குளம் அருகே உள்ள திரிபுரநாதஸ்வரர் கோவில் முன்பு நடைபெற்றது. அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி கொடியசைத்து குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், மனோகரன் எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன், சிவகிரி தாசில்தார் கிருஷ்ண வேல், வாசுதேவநல்லூர் வட்டார பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள் சந்திரா, வேலம்மாள் தென்மலை பெரியகுளம் கண்மாய் விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, செயலாளர் பாபுராஜ், பொருளாளர் குருசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜூ, உதவி செயற்பொறியாளர் தினேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story