கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சிடுவம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் கிருஷ்ணகிரியில் மேல் சோமார்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இவருக்கும், திருமணம் ஆன ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்தது. இதையறிந்த பெற்றோர் கார்த்திக்கை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே உள்ள நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற அசோக்குமார் (23). பொக்லைன் டிரைவர். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக லோகநாதன் போச்சம்பள்ளி பழனியாண்டவர் கோவில் அருகில் உள்ள ஒரு நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கல்லுப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (40). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story