போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 6:12 AM IST (Updated: 23 May 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி நகர கிளை முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

கிருஷ்ணகிரி,  

மத்திய, மாநில அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி நகர கிளை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை பொதுச்செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். பணிமனை தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். துணை செயலாளர் சென்றாயன், குமார், ஜான்லூயிஸ் உள்பட பலர் பங்கேற்றனர். கிளை செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

 ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கக்கூடாது. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றக்கூடாது. அக விலைப்படியை நிறுத்தி வைக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story