சாணார்பட்டி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு அரிசி வினியோகம் முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார்


சாணார்பட்டி ஒன்றியத்தில்  பொதுமக்களுக்கு அரிசி வினியோகம்  முன்னாள் அமைச்சர் விசுவநாதன் வழங்கினார்
x
தினத்தந்தி 23 May 2020 6:48 AM IST (Updated: 23 May 2020 6:48 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி ஒன்றிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

கோபால்பட்டி, 

நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களில் 97ஆயிரத்து 324 ரேஷன் கார்டுதாரர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சாணார்பட்டி ஒன்றியத்தில் வேம்பார்பட்டி, கோம்பைபட்டி, வி.டி.பட்டி, சாணார்பட்டி, சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி, மடூர், ராஜக்காபட்டி ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அரிசி பையை வழங்கினார். இதில் நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராஜ், நத்தம் ஒன்றிய செயலாளர் ஷாஜகான், ஆர்.வி.அமர்நாத், சாணார்பட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் வி.சுப்பிரமணி, கே.சுப்பிரமணி, செல்வராஜ், கல்யாணசுந்தரம், இளம்வழுதி மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story