வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 May 2020 2:03 AM GMT (Updated: 23 May 2020 2:03 AM GMT)

வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

குளச்சல், 

வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவில்கள்

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் பொதுமக்கள் நேரில் சென்று வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகள், கம்பெனிகள், அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே வருகிற 1-ந் தேதி முதல் பெரிய கோவில்கள் மட்டும் திறக்கப்போவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது பிரிவினையை உருவாக்கும் செயலாகும்.

அரசு செவி சாய்க்க வேண்டும்

எனவே, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் அனைத்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் ஆகியவை திறந்து சமூக இடைவெளியுடன் வழிபாடு நடத்த அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அரசால் கொரோனாவை தடுக்க முடியாத சூழலில் மக்களின் நம்பிக்கையான இறைவழிபாட்டின் வாயிலாக நோயினை விரட்ட சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும். பொதுமக்களின் நம்பிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.

மேலும், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை உடனே பணிக்கு திரும்ப பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்து, பஸ் போக்குவரத்து, பள்ளி-கல்லூரிகள் திறந்த பின் பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story