குஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயிலில் மதுரை வருகை 27 பஸ்களில் அனுப்பிவைப்பு


குஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயிலில் மதுரை வருகை  27 பஸ்களில் அனுப்பிவைப்பு
x
தினத்தந்தி 23 May 2020 10:15 AM IST (Updated: 23 May 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் தவித்த 398 பேர் சிறப்பு ரெயில் மூலம் நேற்று மதுரை வந்தடைந்தனர்.

மதுரை, 

குஜராத் மாநிலத்தில் பணிபுரிந்த தமிழகத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 389 பேர் அகமதாபாத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சிறப்பு ரெயிலில் கடந்த 19-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த சிறப்பு ரெயில் நேற்று மதியம் மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது.

அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 118 பேர், கோவையை சேர்ந்த 17 பேர், ஈரோட்டை சேர்ந்த 20 பேர், தேனியை சேர்ந்த 30 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த 105 பேர் உள்பட மொத்தம் 10 மாவட்டங்களை சேர்ந்த 398 பேர் மதுரை ரெயில் நிலையத்தில் இறங்கினார்கள்.

27 பஸ்களில் அனுப்பிவைப்பு

அவர்கள் அனைவருக்கும் மதுரை ரெயில் நிலைய நுழைவு வாசல் பகுதியில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மதுரையில் இருந்த 27 சிறப்பு பஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story