சாலைக்கிராமம் பெரியகண்மாய் குடிமராமத்து பணி அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


சாலைக்கிராமம் பெரியகண்மாய் குடிமராமத்து பணி  அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 May 2020 11:14 AM IST (Updated: 23 May 2020 11:14 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் குடிமராமத்து பணியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் உள்ள பெரியகண்மாய் குடிமராமத்து பணிக்கு தமிழக அரசு ரூ.1 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யதது. இதையடுத்து குடிமராமத்து பணி தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சாலைக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் வரவேற்றார்.

தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு குடிமராமத்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளான கண்மாய், ஊருணி ஆகியவை தூர்வாரி குடிமராமத்து செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதே வழியில் தற்போது ஆட்சி செய்து வரும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரும் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளை குடிமராமத்து பணி செய்ய அதிக நிதி ஒதுக்கீடு செய்து தற்போது தமிழகம் முழுவதும் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

தண்ணீர் வரத்து

இதன் மூலம் மழைக்காலங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய ஏதுவாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், திட்ட இயக்குனர் வடிவேல், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் பாரதிராஜன், சாலைக்கிராமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரத்தினம், துணைத்தலைவர் சுகுமாறன், ஒன்றியக் குழு தலைவர் முனியாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பர்னபாஸ்அந்தோணி மற்றும் ரமேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சொர்ணகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முருகன், சீமைச்சாமி, சண்முகம், சாத்தையா, கோட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவர் சைமன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், குருசேகரன், காரிச்சாமி, ஆனந்தமூர்த்தி, ஊராட்சி செயலர் ஜெகதீஸ்வரன், சாலைக்கிராமம் நீர்பாசன விவசாயிகள் ராமராஜ், முன்னாள் வட்டார வளர்ச்சி பொண்ணுச்சாமி, ஜெகநாதன், நாகேந்திரன், பழனிக்குமார், பால்ராஜ், வீராசாமி, கனிக்குமார், ராமலிங்கம், சக்திமுருகன், முத்துச்சாமி, செல்லத்துரை, திருமுருகன், நாகுகணேசன், மணி ஆகியோர் திரளாக கலந்துகொண்டனர். சாலைக்கிராமம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் சாலைக்கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜாகீர்உசேன் நன்றி தெரிவித்தார்.

Next Story