வக்பு வாரியத்துக்கு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
வக்பு வாரியத்துக்கு தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கப்பட்டு மீண்டும் முறையாக அமைக்கப்படாமல் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளபோது தற்போது திடீரென அனைத்து மாவட்டங்களிலும் வக்பு குழுக்களை அமைக்க தமிழ்நாடு வக்பு வாரியம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நடவடிக்கை முறைகேடுகள் ஏற்பட வழிவகுக்கும். தமிழக அரசு எதற்காக வக்பு வாரியத்தை அமைக்க தயங்குகிறது என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு தன்னாட்சி அமைப்பை அரசு தனி அதிகாரி மூலம் மட்டுமே 6 மாதத்திற்கு மேலாக இயக்கி வரும் சூழலில் மீண்டும் வாரிய தலைவர், வாரிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படாத சூழலில் மாவட்ட வாரியாக புதிய வாரிய குழுக்களை அமைக்க முடிவு எடுத்திருப்பது முறையற்ற செயல். இதனை உடனடியாக அரசு கைவிடவேண்டும். மேலும் வாரிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களை உடனடியாக தேர்ந்தெடுத்து அதிகாரப்பூர்வ வக்பு வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story