மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மின்கட்டணம் உயருகிறது + "||" + Electricity rises in Puducherry

புதுச்சேரியில் மின்கட்டணம் உயருகிறது

புதுச்சேரியில் மின்கட்டணம் உயருகிறது
புதுச்சேரியில் மின் கட்டணம் உயருகிறது.
புதுச்சேரி,

புதுச்சேரியில் மின் கட்டணங்கள் உயருகிறது. அதன்படி வீட்டு உபயோகங்களுக்கான மின்கட்டணம், வர்த்தக ரீதியிலான மின் உபயோகங்களுக்கும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்):- வீட்டு உபயோகங்களுக்கு முதல் 100 யூனிட் வரை (பழைய கட்டணம் 1.30 காசுகள்) 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1.50 காசுகளாக உயர்ந்துள்ளது.


அதேபோல் 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை (பழைய கட்டணம் ரூ.2.50 காசுகள்) 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.2.55 காசுகளாகவும், 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை (பழைய கட்டணம் ரூ.4.35 காசுகள்) 15 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.50 காசுகளாகவும், 300 யூனிட்டிற்கு மேல் (பழைய கட்டணம் ரூ.5.60 காசுகள்) 30 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.90 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் வர்த்தக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் யூனிட்டிற்கு 10 பைசா முதல் 30 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அடிப்படை கட்டணங்களிலும் ஒருசில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல் அமலாகிறது. இணைமின்சார ஒழுங்குமுறையின் பரிந்துரையின்பேரில் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.