ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி மந்திரி ஹசன் முஷ்ரிப் தகவல்


ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி மந்திரி ஹசன் முஷ்ரிப் தகவல்
x
தினத்தந்தி 24 May 2020 5:38 AM IST (Updated: 24 May 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவி வழங்கப்படும் என மந்திரி ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.

மும்பை,

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம், மாநிலங்களின் பொருளாதாரமும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளன.

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக பிரதமர் மோடி ரூ.20 லட்சத்துக்கான சிறப்பு தொகுப்பை அறிவித்தார்.

இந்தநிலையில், மராட்டியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநில ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஹசன் முஷ்ரிப் கூறியதாவது:-

மராட்டியத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவ அரசு ஒரு தொகுப்பை அறிவிக்கும். அந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை திகைக்க வைக்கும்.

இதன் மூலம் கடந்த 2 மாதமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், ஆட்டோ டிரைவர்கள், சலூன் கடைக்காரர்கள், பழ விற்பனையாளர்கள், மற்ற வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டவர்களும் பயனடைவார்கள். இதற்கான பணிகளை முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் தொடங்கி உள்ளனர்.

மத்திய அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வசதியை அறிவித்துள்ளது.

இவர்களுக்கு வங்கிகள் பணம் தருமா? யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள். செலவுக்கு பணம் கொடுப்பதற்கும், கடன் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கடன் வசதியால் மக்கள் யாரும் பயனடைய போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story