மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளுக்கு பிறகுஅரசு அலுவலகங்களில் சனிக்கிழமையில் பணியாற்றிய ஊழியர்கள் + "||" + After many years Employees worked in government offices on Saturdays

பல ஆண்டுகளுக்கு பிறகுஅரசு அலுவலகங்களில் சனிக்கிழமையில் பணியாற்றிய ஊழியர்கள்

பல ஆண்டுகளுக்கு பிறகுஅரசு அலுவலகங்களில் சனிக்கிழமையில் பணியாற்றிய ஊழியர்கள்
பல ஆண்டுகளுக்கு பிறகு அரசு அலுவலகங்களில் சனிக்கிழமையில் ஊழியர்கள் பணியாற்றினர்.
திருச்சி, 

பல ஆண்டுகளுக்கு பிறகு அரசு அலுவலகங்களில் சனிக்கிழமையில் ஊழியர்கள் பணியாற்றினர்.

அரசு அலுவலகங்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இதனால் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பஸ், ரெயில், விமானம் போன்ற போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப் பட்டன. அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், இனி வாரத்தின் 6 நாட்களும் (சனிக்கிழமை உள்பட) வேலை செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 18-ந் தேதி முதல் சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் தான் பணி செய்து வந்தனர். சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்து வந்தது.

சனிக்கிழமை பணியாற்றிய ஊழியர்கள்

ஆனால் சனிக்கிழமையான நேற்று அரசு ஊழியர்கள் பணியாற்றினார்கள். திருச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் இருந்தனர். இதற்கு முன்பு ஏதாவது அவசர தேவைக்காக மட்டும் ஒரு சில ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி வந்தார்களே தவிர, முழுவதுமாக அலுவலகம் இயங்காது.

ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதன்முறையாக அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கின. கொரோனா வைரசின் தாக்கம் காலம், காலமாக கடைபிடித்து வந்த நடவடிக்கைகளில் இருந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.