லத்தேரி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை


லத்தேரி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 25 May 2020 4:30 AM IST (Updated: 25 May 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

லத்தேரி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காட்பாடி, 

லத்தேரியை அடுத்த எல்.என்.புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் அபிதா (வயசு 22 ). இவரும், கிழ்முட்டுக்கூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அபிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பனமடங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட அபிதாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story