3,500 குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் அரிசி - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
3,500 குடும்பங்களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அரிசி வழங்கினார்.
ஆரணி,
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தனது சொந்த கிராமத்தில் உள்ள 3,500 வீடுகளுக்கு, சேவூர் கிராமத்தில் உள்ள ஓசூரம்மன் கோவில் திடலில் கொரோனா நிவாரணமாக அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் பங்கேற்று மேற்கண்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் மொத்தம் ரூ.14 லட்சம் மதிப்பில் தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சேவூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் வி.வெங்கடேசன், கே.பெருமாள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.கே.குமரவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், கிளை செயலாளர் பாலசந்திரன், ஆரணி ஒன்றிய செயலாளர் பி.ஆர்.ஜி.சேகர், மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, நகர செயலாளர் எ.அசோக்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடிதிருமால், கெளரிராதாகிருஷ்ணன், மாவட்ட ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு, அரசு வக்கீல் கே.சங்கர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், கிராம பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story