மரங்கள் சாய்ந்து 3 மின்கம்பங்கள் கீழே விழுந்தன


மரங்கள் சாய்ந்து 3 மின்கம்பங்கள் கீழே விழுந்தன
x
தினத்தந்தி 25 May 2020 4:30 AM IST (Updated: 25 May 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

கம்பலிகாரன்குப்பத்தில் மரங்கள் சாய்ந்து 3 மின்கம்பங்கள் கீழே விழுந்தன.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் ஏம்பலம் தொகுதி கம்பலிகாரன்குப்பத்தில் பப்பாளி மற்றும் முருங்கை மரங்கள் திடீரென்று சிமெண்டு மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் தாக்குப்பிடிக்க முடியாமல் அருகே இருந்த மின்கம்பம் சாய்ந்தது. அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று விழுந்து 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து அந்த பகுதியில் மின்சார வினியோகம் தடைபட்டது.

மின்கம்பங்கள் கீழே விழும்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மட்டும் சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்புகளை சரிசெய்தனர்.


Next Story