ரம்ஜான் பண்டிகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


ரம்ஜான் பண்டிகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

ரம்ஜான் பண்டிகையையொட்டி மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பை,

கொரோனா பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் பண்டிகை கொண்டாட்டத்தின் போது சமூகவிலகல் மற்றும் ஊரடங்கு மீறப்படுவதை தடுக்க மும்பையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசாருடன் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையினர், மத்திய ஆயுத படையினர், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஏற்கனவே போலீசார் மதகுருமார்கள் மூலம் வீட்டில் பண்டிகையை கொண்டாட பொது மக்களை கேட்டு கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் பிரனாய் அசோக் கூறுகையில், ‘‘சமுதாய தலைவர்கள் மூலம் இஸ்லாமியர்கள் குறிப்பாக இளைஞா்களை வீட்டில் தொழுகை நடத்த கேட்டு கொண்டு உள்ளோம். ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளோம். நகாில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இளைஞா்கள் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவதை தடுக்க சந்திப்பு பகுதிகளில் அதிகளவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்’’ என்றார்.


Next Story