உள்நாட்டு விமானங்கள் இயக்கம் தயார் நிலையில் மும்பை விமான நிலையம்


உள்நாட்டு விமானங்கள் இயக்கம் தயார் நிலையில் மும்பை விமான நிலையம்
x
தினத்தந்தி 25 May 2020 5:39 AM IST (Updated: 25 May 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் நிலையில், மும்பை விமான நிலையம் அதற்காக தயார் நிலையில் உள்ளது.

மும்பை,

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட பொது வாகன போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.

இவ்வாறு ஆங்காங்கே சிக்கியவர்களை தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக மத்திய அரசு சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று வெளிநாடுகளில் தவித்து வந்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அதே நேரத்தில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் சிக்கி தவித்து வரும் வெளிநாட்டு தொழிலாளர்களை விமானங்கள் மூலம் அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு தமிழகத்தில் சிக்கிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள், சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.வித்து அதன்படி உள்நாட்டு விமான சேவை நடைபெற வேண்டும் என்று அறிவித்து உள்ளது.

அதன்படி விமான சேவை தொடங்க உள்ள நிலையில், பயணிகளை வரவேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் தயாராகி வருகிறது. அதன்படி மும்பை உள்நாட்டு விமான முனையமும் பயணிகளை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தின் அனைத்து இடங்களும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை இருக்கிறதா? என்பதை கேட்டறிவதுடன் தெர்மல் மீட்டர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னரே பயணிகள் தங்களின் பயணத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும், விமானத்தில் பயணம் செய்வதற்கான அனுமதி சீட்டை(போர்டிங்பாஸ்) முன்பு போன்று விமான நிலைய ஊழியர்கள் நேரடியாக கைகளில் வாங்கி பரிசோதனை செய்வதற்கு பதில் கண்ணாடி திரை ஒன்று அமைக்கப்பட்டு அதில் பயணிகள் அனுமதி சீட்டை காண்பிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்தநிலையில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக், மும்பை விமான நிலையத்தில் இருந்து 25 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகவும், பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் செய்தி சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

முன்ந்தாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் இருந்து விமானங்களை இயக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

சிவப்பு மண்டலங்களில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது மிகவும் தவறானது என்று மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் கூறியிருந்தார்.

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பையில் விமான சேவையை தொடங்க சிறிது கால அவகாசம் வழங்கும்படி மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரியை வலியுறுத்தியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story