சேரங்கோடு ஊராட்சியில் பண்ணை குட்டை அமைக்கும் பணி மும்முரம்


சேரங்கோடு ஊராட்சியில்  பண்ணை குட்டை அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 25 May 2020 5:52 AM IST (Updated: 25 May 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

சேரங்கோடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொன்னானி அருகே சக்கரைகுளம் பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பணி தொடங்கி, மும்முரமாக நடந்து வருகிறது.

இதனை ஊராட்சி தலைவர் லில்லி எளியாஸ், துணை தலைவர் சந்திரபோஸ், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மோகன்குமாரமங்கலம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன், பொறியாளர் மணிகண்டன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஊராட்சி செயலாளர் சஜீத் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படாமல் இருக்க பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகிறது. இதனால் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும். இதன் மூலம் விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது என்றனர்.

Next Story