மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனாபாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது + "||" + The highest peak in maharashtra corona is the 3,041 people in a single day

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனாபாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனாபாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
மும்பை,

மராட்டிய மாநிலத்துக்கு ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மிகப்பொிய அச்சுறுத்தலாகி உள்ளது.

மாநிலத்தில் கடந்த மார்ச் 9-ந் தேதி புனேயில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன்பிறகு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வந்தது. இதில் கடந்த(ஏப்ரல்) மாத கடைசியில் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.


அதன்பிறகு கொடிய கொரோனா மாநிலத்தில் தனது அசுர முகத்தை காட்ட தொடங்கியது. கடந்த 10-ந் தேதி மராட்டியத்தில் வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு அடுத்த 6 நாளில் 10 ஆயிரம் பேரும், அதில் இருந்து 5 நாளில் மேலும் 10 ஆயிரம் பேரும் என 11 நாளில் 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 8 நாட்களாக தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தொற்று தாக்கி வந்தது. இந்தநிலையில் முதன் முதலாக ேநற்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதன்படி 3 ஆயிரத்து 41 பேர் பாதிப்புக்கு ஆளானார்கள்.

இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதாவது மாநிலத்தில் 50 ஆயிரத்து 231 பேர் ெதாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 3-ல் 1 பங்கினர் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது 3-ல் 1 பங்கை விட அதிகம் பேர் மராட்டியத்தை சேர்ந்தவர்களாக மாறி உள்ளனர்.

மாநிலத்தில் புதிதாக 58 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 1,635 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,725 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 542 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் 5-ல் 3 பங்கு மும்பையை சேர்ந்தவர்கள்.

இதேபோல புதிதாக 39 பேர் மும்பை நகரில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதுவரை மும்பையில் 988 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர்.

மேலும் 8 ஆயிரத்து 74 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 2,590 (36 பேர் பலி), தானே புறநகர் - 420 (4), நவிமும்பை மாநகராட்சி - 2,007 (29), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 889 (7), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 169 (3), பிவண்டி மாநகராட்சி - 86 (3), மிரா பயந்தர் மாநகராட்சி - 464 (5), வசாய் விரார் மாநகராட்சி - 562 (15), ராய்காட் - 412 (5),

பன்வெல் மாநகராட்சி - 330 (12). மாலேகாவ் மாநகராட்சி - 711 (44). புனே மாநகராட்சி - 5,075 (251), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 267 (7), சோலாப்பூர் மாநகராட்சி - 577 (39), அவுரங்காபாத் - 1,446 (47), நாக்பூர் மாநகராட்சி - 464 (7).