மாவட்ட செய்திகள்

மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலக கட்டுமான பணி ; அமைச்சர் தொடங்கி வைத்தார் + "||" + Central Co-operative Bank Branch Construction work; The Minister commenced

மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலக கட்டுமான பணி ; அமைச்சர் தொடங்கி வைத்தார்

மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலக கட்டுமான பணி ; அமைச்சர் தொடங்கி வைத்தார்
பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
பொம்மிடி,

பூமி பூஜை விழாவிற்கு அரூர் உதவி கலெக்டர் பிரதாப் தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மத்திய கூட்டுறவு வங்கி கிளை அலுவலக கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வேலுமணி, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தலைவர் விஸ்வநாதன், தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மதிவாணன், பழனிசாமி, தாசில்தார் கற்பகவடிவு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.