நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 May 2020 2:00 AM GMT (Updated: 25 May 2020 2:00 AM GMT)

நாமக்கல் உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதால், அதன் விலை கிலோ ரூ.10 ஆக சரிவடைந்து உள்ளது.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் உழவர் சந்தை சுமார் 2 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. இங்கு செயல்பட்டு வந்த கடைகள் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன.

இங்கு நேற்று 6¾ டன் காய்கறிகள் மற்றும் 2½ டன் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்பட்டதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கடைகளில் தக்காளி கிலோ ரூ.10-க்கும், கத்தரி கிலோ ரூ.20-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.24-க்கும், புடலங்காய் கிலோ ரூ.32-க்கும், கேரட் கிலோ ரூ.36-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.28-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.72-க்கும், இஞ்சி கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

தக்காளி வரத்து அதிகரித்து இருப்பதால் அதன் விலை சரிவடைந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், சந்தை தற்காலிகமாக செயல்படும் பள்ளி வளாகத்தில் நிழலுக்கு வழியில்லை என்பதால் மீண்டும் உழவர்சந்தை வளாகத்தில் சந்தை இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story