மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு + "||" + Inspection of Public Works Chief Engineer at Mettur Dam

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
மேட்டூர்,

பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, மேட்டூர் அணையில் பருவகால ஆய்வை மேற்கொள்ள நேற்று மேட்டூர் வந்தார். அணையின் வலதுகரை, இடது கரை, ஆய்வுச்சுரங்கம், கவர்னர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அணையின் நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


முன்னதாக மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கும் இடமான திப்பம்பட்டி பகுதிக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று வரும் ஆயத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மேட்டூர் வந்த தலைமை பொறியாளர் ராமமூர்த்தியை, சேலம் வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபால், மேட்டூர் அணை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்றனர்.

நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 100.36 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,787 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,118 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு இன்னும் காவிரி நீர் போய் சேராதது கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்
காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறந்து விடுகிறார்.
3. மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
4. மேட்டூர் அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரம்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான முன்னேற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி அணையில் மதகுகள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
5. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 103.7 அடியாக குறைந்ள்ளது.