என்னாநகரத்தில் குடிமாரமத்து பணி


என்னாநகரத்தில் குடிமாரமத்து பணி
x
தினத்தந்தி 25 May 2020 11:30 AM IST (Updated: 25 May 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

கீரப்பாளையம் ஒன்றியம் என்னாநகரம் ஊராட்சியில் என்னாநகரம், மேலவன்னியூர், செட்டிகுளம் ஆகிய கிளை வாய்க்கால்கள் நீண்ட கலமாக தூர்வாரப்படாமல் இருந்தது.

புவனகிரி,

விவசாயம் செய்ய முடியாமல்  அப்பகுதி விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து, சிதம்பரம் பொதுப்பணித்துறை நீர்வளதுறை சார்பில் அந்த வாய்க்கால்களை குடிமராமத்து பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

அதன்படி ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்து பணியை, சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சங்க துணை தலைவர் விநாயகமூர்த்தி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து குடிமராமத்து பணியை விரைவாகவும் சிறந்த முறையில் முடித்து விவசாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த பணியின் போது உதவி பொறியாளர் அய்யன்துரை, பாசன வாய்க்கால் ஆய்வாளர் அருண்குமார், பணி ஆய்வாளர் வெங்கடேசன், பாசன சங்க தலைவர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story