குடவாசல் அருகே ரூ.50 லட்சத்தில் கோணவாய்க்கால் தூர்வாரும் பணி சிறப்பு அதிகாரி ஆய்வு

குடவாசல் அருகே ரூ.50 லட்சத்தில் கோணவாய்க்கால் தூர்வாரும் பணி சிறப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 26 May 2020 5:07 AM IST (Updated: 26 May 2020 5:07 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே ரூ.50 லட்சத்தில் நடைபெற்று வரும் கோணவாய்க்கால் தூர்வாரும் பணியை குடிமராமத்து பணியின் சிறப்பு அதிகாரி ராஜேஸ் லக்காணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடவாசல், 

குடவாசல் அருகே ரூ.50 லட்சத்தில் நடைபெற்று வரும் கோணவாய்க்கால் தூர்வாரும் பணியை குடிமராமத்து பணியின் சிறப்பு அதிகாரி ராஜேஸ் லக்காணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

குடவாசல் அருகே அரசூரில் கோணவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ரூ. 50 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது. அதன்படி கருப்பூரில் இருந்து அரசூர் பாலம் வரை 4½ கி.மீ. தூரத்திற்கு வாய்க்காலில் கரை கட்டுதல், மேடுகளை அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணி நடக்கிறது. இந்த பணியினை குடிமராமத்து பணியின் சிறப்பு அதிகாரி ராஜேஸ் லக்காணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டெல்டா விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப வருகிற ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. எனவே டெல்டா பகுதிகளில் குடிமராமத்து பணிகளை ஒருவார காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த், காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜன், உதவி கலெக்டர் ஜெயபீரித்தா, பொதுப்பணித்துறை நன்னிலம் உதவி செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, குடவாசல் உதவி பொறியாளர் ரத்தினவேல், குடவாசல் தாசில்தார் பரஞ்சோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story