ரம்ஜான் பண்டிகை நாளில் களை இழந்த நாகூர் தர்கா கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வர பிரார்த்தனை


ரம்ஜான் பண்டிகை நாளில் களை இழந்த நாகூர் தர்கா கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வர பிரார்த்தனை
x
தினத்தந்தி 26 May 2020 6:00 AM IST (Updated: 26 May 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகை நாளில் நாகூர் தர்கா களை இழந்து காணப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வர பூட்டப்பட்டு இருந்த தர்கா வாசலில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

நாகூர், 

ரம்ஜான் பண்டிகை நாளில் நாகூர் தர்கா களை இழந்து காணப்பட்டது. கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வர பூட்டப்பட்டு இருந்த தர்கா வாசலில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

எளிமையாக கொண்டாடப்பட்டது

இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ரம்ஜான் கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையாக நடந்தன. பள்ளி வாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால், இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை மேற்கொண்டனர். வழக்கமாக ரம்ஜான் நாளில் நாகை மாவட்டம் நாகூரில் உள்ள உலக பிரசித்திப்பெற்ற ஆண்டவர் தர்காவில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை நடத்துவார்கள். பின்னர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துகளை பரிமாறி கொள்வார்கள்.

வெறிச்சோடிய தர்கா

ஆனால் நேற்று நாகை மாவட்டம் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. நாகூர் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினரோடு ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பூட்டப்பட்டு இருந்த நாகூர் தர்காவின் கால்மாட்டு வாசலில் கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருவதற்காக சிலர் சமூக இடைவெளியுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ரம்ஜான் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை, விளக்க உரை, துவா, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்வுகள் நேற்று நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான ரம்ஜான் தொழுகை புதிய அனுபவத்தை கொடுத்ததாக இஸ்லாமியர்கள் கூறினர்.

Next Story