ஆராய்ச்சி படிப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை


ஆராய்ச்சி படிப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை   காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 May 2020 5:52 AM IST (Updated: 26 May 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் தூக்குப்போட்டு ஆராய்ச்சி படிப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் என்ன? என்று போலீசார் விசாரிக்கின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக ரவி தனது மனைவியுடன் ஊட்டி பாம்பேகேசில் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு பிரீத்தி(வயது 25) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எச்.டி.(ஆராய்ச்சி பிரிவு) படித்து வந்தார்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்லூரி மூடப்பட்டது. இதனால் பிரீத்தி கோவையில் இருந்து ஊட்டிக்கு வந்து தனது தாய், தந்தையுடன் தங்கியிருந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் பிரீத்தி தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கு குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story