உரிகம் வனப்பகுதியில் பெண் யானை சாவு


உரிகம் வனப்பகுதியில் பெண் யானை சாவு
x
தினத்தந்தி 26 May 2020 6:16 AM IST (Updated: 26 May 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

உரிகம் வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ளது உரிகம் வனப்பகுதி. இந்த வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் ஆடு, மாடு மேய்க்க சென்ற கிராம மக்கள் பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உரிகம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பிரபு, உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம், மாவட்ட வன கால்நடை டாக்டர் பிரகாஷ், வனவர் பழனிமுருகன் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு உரிகம் வனச்சரகத்தில் பீர்னப்பள்ளி காப்புக்காட்டில் உள்ள பிலிக்கல் என்ற இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் யானையின் உடலை அந்த இடத்திலேயே பரிசோதனை செய்தனர். உடல் நலக்குறைவு காரணமாக யானை இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து காப்புக்காட்டிலேயே பொக்லைன் எந்திரம் மூலம் குழிதோண்டி இறந்த யானையை, வனத்துறையினர் புதைத்தனர். பெண் யானை இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story