சூதாடிய 14 பேர் கைது


சூதாடிய 14 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2020 6:40 AM IST (Updated: 26 May 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் வரகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.

ராயக்கோட்டை,

வரகானப்பள்ளி பகுதியில்  உள்ள ஒரு ஜல்லி கிரசர் அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கோடீஸ்வரன் (வயது 27), ஹரிஸ்குமார் (27), திருமலை (38), மூர்த்தி (24), முனிராஜ் (33), சங்கரா (59), ஹரிஸ் (28), விஜயகுமார் (28), வெங்கடேஷ்(40), ராஜப்பா(40), எம்.விஜயகுமார்(26) ஆகிய 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஊத்தங்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவன் மற்றும் போலீசார் கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (23), நந்தகோபால் (39), வெங்கடேசன் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story