வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வள்ளியூர்,
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விவசாயி
வள்ளியூர் யாதவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமன் (வயது 42). விவசாயி. இவருடைய மனைவி பார்வதி. கடந்த ஆண்டு பார்வதி இறந்துவிட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட ராமன் சம்பவத்தன்று தனது வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
கூடங்குளம் காந்திநகர் தெருவை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி சுதா (27). கணவர் இறந்ததால் மனஉளைச்சலில் இருந்து வந்தார். இதில் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சுதா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது தனது மகளுக்கும் சேலையால் தூக்கு போட்டுள்ளார். ஆனால் இதில் சிறுமியின் கழுத்து இறுகாததால் அவள் உயிர் தப்பினாள்.
தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சுதா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story