கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புவதால் ஏமாற்றம்
கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்புவதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். மேலும் அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
சேந்தமங்கலம்,
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அடிவாரத்தில் இருந்து 70 கொண்டை ஊசிகளை கடந்து கொல்லிமலைக்கு செல்லவேண்டும்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் கொல்லிமலையில் உள்ள பசுமையான பகுதிகளை காண வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கடந்த 10 நாட்களாகக்கும் மேலாக கொல்லிமலைக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் அடிவார பகுதியான காரவள்ளி வனத்துறை சோதனை சாவடிக்கு வந்ததும் அங்குள்ள கண்காணிப்பு அலுவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு தொடர்வதாக கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள், கண்காணிப்பு அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நடைமுறை பிரச்சினைகளை சந்திப்பதாக கண்காணிப்பு அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் கொல்லிமலைக்கு சென்று வர அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story