ஊரடங்கு எதிரொலி: ஆடு-கோழி இறைச்சி விலை உயர்வு


ஊரடங்கு எதிரொலி: ஆடு-கோழி இறைச்சி விலை உயர்வு
x
தினத்தந்தி 26 May 2020 9:52 AM IST (Updated: 26 May 2020 9:52 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு எதிரொலியால் ஆடு-கோழி இறைச்சிகளின் விலை உயர்ந்துள்ளது.

கரூர், 

ஊரடங்கு எதிரொலியால் ஆடு-கோழி இறைச்சிகளின் விலை உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

இதன் காரணமாக கரூரில் பிராய்லர் கோழி கறி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக விலை உயர ஆரம்பித்து ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் கடந்த வாரம் வரை ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது, நேற்று முதல் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு இன்றி...

அதேபோன்று ஆட்டுக்கறி கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முதல் ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டுக்கோழி கிலோ ரூ.550-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் பொது மக்கள் வேலைவாய்ப்பு இன்றி வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், இறைச்சிகளின் விலை ஏற்றம் இறைச்சி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story