சிறப்பு தொழுகையுடன் முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டாடினர் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவுக்கு வாழ்த்து


சிறப்பு தொழுகையுடன் முஸ்லிம்கள் ரம்ஜான் கொண்டாடினர்  முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவுக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 26 May 2020 11:07 AM IST (Updated: 26 May 2020 11:07 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரம்ஜான் பெருநாளை முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கொண்டாடினர்.

பனைக்குளம்,

முஸ்லிம்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ரம்ஜான் நோன்பு. இந்த நோன்பை 30 நாட்கள் கடைபிடித்து பிறை கண்டவுடன் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை தொடர்ந்து பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. முஸ்லிம்கள் 30 நாளும் நோன்பிருந்து வீடுகளிலேயே தொடர்ந்து தொழுகை நடத்தி வந்தனர்.

நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி அனைத்து முஸ்லிம்களும் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தங்களது வீடுகளிலேயே ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தும்படி தலைமை காஜி அறிவுறுத்தியிருந்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிநகர், சாத்தான்குளம், குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெரியபட்டணம், ரெகுநாதபுரம், பெருங்குளம், புதுமடம், என்மனங்கொண்டான், புதுநகரம், வேதாளை, இருமேனி, பிரப்பன்வலசை, மரைக்காயர்பட்டினம், சீனியப்பாதர்கா, மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம், ஆற்றங்கரை, அழகன்குளம், பனைக்குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார்கோட்டை, வாழூர், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனையின்படி தங்களது வீடுகளிலேயே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நிறைவு செய்தனர்.

வாழ்த்து

முஸ்லிம் ஐக்கிய ஜமாத்துக்கள் சபை செயலாளர் அழகன்குளம் பகுருல் அமீன் தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் தொழுகை நடத்தினார். மேலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜாவை டி-பிளாக்கில் உள்ள அவரது எம்.ஜி.ஆர். இல்லத்தில் பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது, மண்டபம் ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளருமான மருதுபாண்டியன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து சால்வை அணிவித்து ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தினகரன், நாட்டுக்கோட்டை கார்த்திகேயன் மற்றும் அ.தி.மு.க.வினர் அவருக்கு சால்வை அணிவித்து ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல சக்கரக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவரும், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை செயலாளருமான நூர்முகமது முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு ராமநாதபுரம் சுபலெட்சுமி பஜாஜ் நிறுவனம், என்மனங்கொண்டான் ஒன்றிய கவுன்சிலர் காளசுவரி விசுவநாதன், விடியல் அரிமா சங்க தலைவர் ஆர்.வி.விசுவநாதன், புதுமடம் ஊராட்சி தலைவர் காமில் உசேன், அ.ம.மு.க. மண்டப ம் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது அஸ்பர் அலி, ஒன்றிய துணை செயலாளர் மண்டபம் பக்கர், மலேசியா அ.ம.மு.க. பொறுப்பாளர் செய்யது சபியுல்லாகான், என்மனங்கொண்டான் முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல்மாலிக், நூருல்அமீன், ராமநாதபுரம் வக்கீல் சண்முகநாதன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story