பெரம்பலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள் கொரோனா பரவும் அபாயம்


பெரம்பலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள் கொரோனா பரவும் அபாயம்
x
தினத்தந்தி 26 May 2020 11:30 AM IST (Updated: 26 May 2020 11:30 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக சென்று வரும் பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக சென்று வரும் பொதுமக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு இதுவரை 139 பேர் பாதிக்கப்பட்டதில், 135 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாவட்டங்களுள் தற்போது பெரம்பலூர் மாவட்டமும் ஒன்று ஆகும். இதனால் ஊரடங்கு உத்தரவில் தளர்வு இல்லை எனவும், பழைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் மருத்துவ சிகிச்சைக்கு செல்வதென்றால்கூட இ-பாஸ் வாங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலைகளில் சாரை, சாரையாக இரு சக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

கடும் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத நேரத்தில்கூட பொதுமக்கள் முககவசம் அணிந்து சென்றனர். தற்போது கொரோனா தாக்கம் உள்ள நிலையில் முககவசம் அணியாமல் சாலைகளில் வலம் வருகின்றனர். இதனால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் நிலவுகிறது.

முககவசம் அணியாமல் செல்வோர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் மற்றும் பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை மற்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்று கலெக்டர் உத்தரவிட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் பயணிக்காமல், 3 பேர் செல்கின்றனர். கடைவீதிகளிலும் சமூக இடைவெளியை யாரும் பின்பற்றுவது இல்லை. கடைகளில் கூட்டமாக நின்று பொருட்களை வாங்குகின்றனர்.

இதன்மூலம், இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போய் விடுமோ என்று அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, ஊரடங்கை மீறுபவர்கள் மீதும், சட்டதிட்டங்களை கடைபிடிக்காதவர்கள் மீதும் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story