ஊரடங்கின்போது பணியில் உள்ள அரசு அலுவலர்கள்-போலீசாருக்கு யோகா பயிற்சி
அரியலூர் கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், ஊரடங்கின்போது பணியில் உள்ள வருவாய்த்துறை, வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு யோகா பயிற்சி கடந்த ஒரு வாரமாக அளிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில், ஊரடங்கின்போது பணியில் உள்ள வருவாய்த்துறை, வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு யோகா பயிற்சி கடந்த ஒரு வாரமாக அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பற்றிய மன அழுத்தம், நோய் தொற்று வந்த பிறகு ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து டாக்டர் குணாநிதி, சித்த மருத்துவர் புவனலட்சுமி ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். மஹாயோகம் அமைப்பை சேர்ந்த ரிஷி ரமேஷ் தலைமையில், கின்னஸ் சாதனை புரிந்த மாஸ்டர்கள் வினோத்குமார், ராஜ்குமார் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
Related Tags :
Next Story