தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி


தஞ்சை மாவட்டத்தில், 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி
x
தினத்தந்தி 26 May 2020 11:14 PM GMT (Updated: 26 May 2020 11:14 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்கப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (புதன்கிழமை) தொடங்கப்படுகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து, தஞ்சையில் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.வி.செல்வராஜ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

பட்டுக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உள்பட 8 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது.

1,449 பேர்

இந்த மையங்களில் தலா 207 முதன்மைத்தேர்வாளர்களும், அலுவலர்களும், 1,242 உதவி தேர்வாளர்களும் என மொத்தம் 1,449 பேர் பணியாற்ற உள்ளனர். இந்த மையங்களில் அந்தந்த நகராட்சி, மாநகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படும். ஆசிரியர்கள் தங்கும் இடத்திலிருந்து முகாமுக்கு சென்று வர தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 9 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story