7 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள்: மும்பையில் 2 வாரங்களில் அமைகிறது

மும்பையில் 2 வாரங்களில் 7 ஆயிரம் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மும்பை,
மும்பையில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தநிலையில் மாநில அரசு மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா சிகிச்சை மையங்கள், படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.
அதன்படி அடுத்த 2 வாரங்களில் மும்பையில் மகாலெட்சுமி ரேஸ்கோர்ஸ், கோரேகாவ், தகிசர், முல்லுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 7 ஆயிரம் படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த தகவலை முதல்-மந்திரி அலுவலக அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் அவர், "வருகிற 31-ந் தேதிக்குள் மும்பையில் 2 ஆயிரத்து 475 படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். மாநில அரசு குறைந்தது 100 படுக்கைகள், 20 அவசர சிகிச்சை மையங்களுடன் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளை கையகப்படுத்தி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி வருகிறது.
மும்பையில் கொரோனா சம்மந்தப்பட்ட தேவைகளுக்கான ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் 100-ல் இருந்து 450 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story