கொரோனா பரவலை தடுக்க 12 தீயணைப்பு நிலையங்கள் மூலம் 4½ லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிப்பு - அதிகாரி தகவல்


கொரோனா பரவலை தடுக்க 12 தீயணைப்பு நிலையங்கள் மூலம் 4½ லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிப்பு - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 May 2020 5:36 AM IST (Updated: 27 May 2020 5:36 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க 12 தீயணைப்பு நிலையங்கள் மூலம் 4½ லட்சம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை ஊரடங்கில் கொரோனா பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 தீயணைப்பு நிலையங்கள் மூலம் 4 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினியை தீயணைப்புப்படை வீரர்கள் தெளித்துள்ளனர்.

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு நாள்தோறும் இளநீர், மோர், அவித்த முட்டை போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டு உள்ள முகாம்களில் தீயணைப்புப்படை வீரர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீயணைப்புப்படை வீரர்கள் கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.

கோடைக்காலத்தில் ஏற்படும் தீ விபத்து மற்றும் மீட்பு அழைப்புகளுக்கும் சென்று பணியாற்றி வருகின்றனர். இந்தத் தகவலை திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தெரிவித்துள்ளார்.

Next Story