பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,032 ஆசிரியர்கள் கலெக்டர் தகவல்


பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியில் 1,032 ஆசிரியர்கள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 May 2020 6:02 AM IST (Updated: 27 May 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையமான புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம், 

நாகையில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையமான புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை கலெக்டர் பிரவீன்நாயர் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. நாகை கல்வி மாவட்டத்தில் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் மதிப்பீட்டு மையமாக செயல்படும். 

நாகை ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இ.ஜி.எஸ்.பிள்ளை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம் எஸ்.கே.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை துணை மதிப்பீட்டு மையங்களாக செயல்படும். நாகை மாவட்டத்தில் 2 முதன்மை மதிப்பீட்டு மையங்களும், 5 துணை மதிப்பீட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 1,032 முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடுவார்கள். 72,349 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. மதிப்பீட்டு மையத்துக்கு ஆசிரியர்கள் வருவதற்கு வசதியாக 14 வழித்தடங்களில் 455 ஆசிரியர்கள் பயணம் செய்ய வசதியாக 63 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த 14 வழித்தடங்களில் இருந்து பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க 14 ஆசிரியர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story