சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்,
சேலம் மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் சுல்தான் ரியாஸ்தீன் தலைமையில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் சுலைமான் சேட், முகமது யூனுஸ், சமீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டையாம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டையாம்பட்டி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சாமி என்ற அந்தோணி தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ஜினீயர் தமிழரசன், கை புதூர் பெருமாள் மற்றும் சிதம்பரம், சின்னதம்பி, தயாளன், முத்தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் மின் திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங் கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி நின்றனர். மேலும் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது, மின்சாரத்தை தனியாருக்கு விற்க திட்டம் திட்டமிடக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பாண்டியன், திருமுருகன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநகரில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை துணைத்தலைவர் சுல்தான் ரியாஸ்தீன் தலைமையில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் சுலைமான் சேட், முகமது யூனுஸ், சமீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அணைஅரசு, மாவட்ட பொருளாளர் ஓ.சு.மணி, ஆத்தூர் நகர தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முஸ்தபா, முன்னாள் விவசாய அணி தலைவர் கிருஷ்ணா, ஆத்தூர் வட்டார தலைவர் சோமசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், மகிளா காங்கிரஸ் தலைவி மகாலட்சுமி, கோட்டை செந்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆட்டையாம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டையாம்பட்டி நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சாமி என்ற அந்தோணி தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ஜினீயர் தமிழரசன், கை புதூர் பெருமாள் மற்றும் சிதம்பரம், சின்னதம்பி, தயாளன், முத்தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஆட்டையாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளம்பிள்ளை பேரூராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் இளம்பிள்ளை நகர தலைவர் சாம்பலிங்கமூர்த்தி, மாவட்ட செயலாளர் ராஜா கவுண்டர், நகர பொருளாளர் சுகுமார், நகர துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைவாசல் தபால் நிலையம் முன்பு மாவட்ட பொதுச்செயலாளர் அரங்க சங்கரய்யா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர்கள் உதயகுமார், வெங்கடேசன், மாவட்ட செயலாளர் நேதாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெய்ஆனந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story