திருச்சி-சென்னை இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம்
திருச்சி-சென்னை இடையே கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
செம்பட்டு,
திருச்சி-சென்னை இடையே கொரோனாவால் நிறுத்தப்பட்ட விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.
விமான சேவை ரத்து
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களும், பெங்களூருக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தொிவித்தது. அதன்படி, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு திட்டமிட்டபடி நேற்று முன்தினம் இரவு விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் சென்னைக்கு விமானங்களை இயக்க அனுமதி கிடைக்காததால் நேற்று முன்தினம் விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனால் அதில் பயணம் செய்த பயணிகளின் டிக்கெட்டுகள் மறுநாள்(நேற்று) செல்லும் வகையில் மாற்றப்பட்டன.மீண்டும் தொடங்கியது
Related Tags :
Next Story