மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 May 2020 10:23 AM IST (Updated: 27 May 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மலைக்கோட்டை,

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாநகர் மாவட்டம்

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையில் உள்ள மத்திய அரசின் தேசிய மத்திய மின்சார திட்டத்தை எதிர்த்தும், இதனை நடைமுறைப்படுத்துவதை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அருணாச்சல மன்றம் அலுவலகத்தில் இருந்து காங்கிரசார் ஊர்வலமாக தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே வந்தனர்.

அங்கு காந்தி சிலை முன் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜவஹர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தியும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வடக்கு மாவட்டம்

இதேபோல் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்ட தலைவர் கலை தலைமையில் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தநல்லூர் வட்டார காங்கிரசின் சார்பில் கிழக்கு வட்டார தலைவர் கனகராஜ் தலைமையில் ஜீயபுரம் கடைவீதியிலும், சிறுகமணி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜலிங்கம் தலைமையில் பெட்டவாய்த்தலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story